சென்னை, கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்திற்கு போடப்பட்ட 5 டெண்டர்கள் தவெக அரசு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 60 ஆயிரம் டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர், மினி பேருந்துகளுக்கு அடி சட்டம் வாங்க போடப்பட்ட டெண்டர், மினி பேருந்துகளுக்கு, புதிய பேருந்து கூடு கட்டும் டெண்டர், பேருந்துகள் இருக்கும் இடம் அறிய பயன்படும் ஜிபிஎஸ் கருவிகள் வாங்குவதற்கு போடப்பட்ட டெண்டர் உள்ளிட்ட 5 டெண்டர்களை தமிழ்நாடு அரசு இன்று ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. திமுக அரசால் போடப்பட்ட டெண்டரில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக்கூறி அந்த டெண்டர்களை அரசு ரத்து செய்துள்ளது. எனவே, விரைவில் தவெக அரசு புதிய டெண்டர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/five-tenders-floated-for-the-transport-corporation-during-the-dmk-regime-cancelled




