தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தல் வழக்கில் 2-வது இடம் பிடித்த வேட்பாளரை வெற்றிப் பெற்றவராக ஐகோர்ட்டு அறிவிக்கும்பட்சத்தில், இடைத்தேர்தல் ஒருவர் வெற்றி பெறும்போது, அது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து கடந்த ஜூலை 10-ந்தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே மனுதாரர், எதிர்மனுதாரரான விஜய் உள்ளிட்டோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அறிவிக்க முடியாது அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தயாராக உள்ளோம். இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. ஆறு மாத கால அவகாசம் உள்ளது. தேர்தல் ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்பே மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டது. தீர்ப்பு தள்ளிவைப்பு விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி, இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும்’’ என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/verdict-reserved-in-the-case-seeking-a-stay-on-the-by-elections-for-five-constituencies




