விருதுநகர், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. ஆடி பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நள்ளிரவு முதல் பல்வேறு வாகனங்களில் வருகை தந்த பக்தர்கள் தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். பின்னர் இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வகையான அபிஷேகம் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடித்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதே போன்று சந்தன மகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/aadi-pradosham-pournami-devotees-flock-to-sathuragiri




