காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் விழாவில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா புறப்படத் தயாரானது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கானா பாடல்களை ஒலிபரப்பக் கோரி தகராறில் ஈடுபட்டனர். அதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இரண்டு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். கொலை செய்யப்பட்ட நீலகண்டன் இதையடுத்து சந்துரு, விக்கி (எ) நீலகண்டன் ஆகிய இருவர் அந்தப் பகுதியில் உள்ள மைதானத்தில் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரிக்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்ப போலீஸார் முயன்றார். அப்போது இளைஞர்களின் உறவினர்கள், போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்காததே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. ஒன்றரை மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சடலங்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரித்தார். மேலும் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து எஸ்.பி. அரவிந்த் உத்தரவிட்டார். கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட நீலகண்டன், வெல்டிங் வேலை செய்து வந்தார். சந்துரு, கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தநிலையில் இந்தக் கொலை நடந்திருக்கிறது. அதுதொடர்பாக சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்" என்றனர். அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/kanchipuram-double-murder-amid-temple-festival-dispute-heavy-police-deployment




