மாட்ரிட், 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட் லைப் ஸ்டேடியத்தில் கடந்த நடந்த இறுதி ஆட்டத்தில் ரோட்ரி தலைமையிலான ஸ்பெயின் அணி கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பிய னாக களம் கண்ட மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆட்டம் முடிந்ததும் ஸ்பெயின் அணி வீரர்கள் மைதானத்தை வலம் வந்து தங்களது வெற் றியை ஆரவாரமாக கொண்டாடினர். மைதானத்துக்குள் ஓடிவந்த ஸ்பெயின் அணி வீரர்களை சில அர்ஜென்டினா வீரர்கள் தாக்கியது வீடியோ காட்சிகள் முலம் வெட்டவெளிச்சமானது. அர்ஜென்டினா வீரர் மோலினா, ஸ்பெயின் கேப்டன் ரோட்ரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், அதனை தடுக்க வந்த சக வீரர்களான எரிக் கார்சியா, காவியை அர்ஜென்டினா அணியின் லியாண்ட்ரோ பாரேட்ஸ், தியாகோ அல்மாடா ஆகியோர் கழுத்தை பிடித்து கீழே தள்ளிவிடுதும், சமூக வலை தளங்களில் வைரலானது. இது கால்பந்து ஆர்வலர்களை முகம் சுளிக்க வைத்தது. சர்வதேச வீரர்களின் தரம் தாழ்ந்த செயலால் கடும் அதிருப்திக்குள்ளாகி இருக்கும் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) மைதானத்தில் வீரர்கள் இடையே நடந்த அநாகரீகமான மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிபா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இறுதி ஆட்டம் முடிந்த பிறகு நடந்த விதிமுறை மீறல்கள் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொள்ளும். இதற்காக ஒழுங்கு மற்றும் நெறிமுறை கமிட்டி சார்பில் வக்கீல் ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/investigation-into-the-attack-on-spanish-players-by-the-argentine-team-fifa




