வெலிங்டன், காலநிலை மாற்றத்தால் குன்னூரில் தற்போது நீர் பனிப்பொழிவு காணப் படுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நீர் பனிப்பொழிவு நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி யது. ஆனால், எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கடந்த மாத இறுதியில் இருந்து பருவமழை தீவிரம் அடைந்தது. குன்னூர், வெலிங்டன், கேத்தி, எடப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. குன்னூர் பகுதியில் அதிகாலை நேரங்களில் கடும் நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் கடும்குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக அதிகாலையில் வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் கடும் குளிரால் அவதி அடைந்து வருகின்றனர். இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாத இறுதியில் நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. பின்னர் உறைபனி தாக்கம் அதிகரிக்கும். காலநிலை மாற்றம் காரணமாக தற்போது நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. பசு மையான புல்வெளிகளில் நீர் துளிகள் கோர்த்து உள்ளதை பார்க்க முடி கிறது. மேலும் குன்னூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம், வெலிங்டன் ராணுவ மைதானம் மற்றும் பூங்காக்களின் புல்வெளிகளில் நீர் பனிப்பொழிவு படர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் முறையாக பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். கடுங்குளிரை சமாளிக்க மக்கள் அதிகாலையில் ஸ்வெட்டர் அணிந்தவாறு வெளியில் செல்கின்றனர். குன்னூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கடும் குளிர் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்லாமல், தங்கும் அறையிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். நீர் பனிப்பொழிவால் பொதுமக்கள், விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/frost-in-coonoor-due-to-climate-change




