திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் மாநிலங்களவை எம்.பிக்களான சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பரைக் ஆகியோர் பாஜகவில் இணைந்த சில மணி நேரத்தில் மாநிலங்களை இடைத்தேர்தலில் அவர்களை தங்களது கட்சி வேட்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இந்த மூவரும் ஒரு மாதத்திற்கு முன்பு தங்களது மாநிலங்களை எம்.பி பதவியையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அக்கட்சியில் அதிருப்தியாளர்களின் கை ஓங்கியது. கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக 60 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி தனி அணியாக சென்று தாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். மம்தா பானர்ஜி இந்த காலக்கட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களை உறுப்பினர்களாக இருந்த சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பரைக் ஆகியோர் தங்களது மாநிலங்களை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் நேற்று முறைப்படி தங்களை பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டனர். பாஜகவில் இணைந்த மூன்று முன்னாள் எம்பிக்களும், முந்தைய கட்சியின் தலைமை உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் அக்கட்சியின் கீழ் நிலவிய ஊழல் மற்றும் வளர்ச்சியின் மந்தநிலை ஆகியவற்றால் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாகவே தாங்கள் திரிணாமுல் காங்கிரஸை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்தனர். அவர்கள் மூவரும் ராஜினாமா செய்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 14ம் தேதி முடிகிறது. இந்நிலையில் மூன்று பேரையும் பா.ஜ.க தங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. மேற்கு வங்கத்தில் நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 208 இடங்களில் வென்றிருந்தது. ஆனால், தற்போது திரிணாமுல் காங்கிரஸின் சுமார் 65 எம்.எல்.ஏ.க்கள் ரிதப்ரதா பானர்ஜியைத் தங்களது தலைவராகக் கொண்டு ஒரு தனி அணியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களையும் பாஜக முழுமையாகக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸின் தற்போதைய உண்மையான பலம் 10 எம்பிக்களாகக் குறைந்துள்ளது; மக்களவையில் அதன் பலம் எட்டாகக் குறைந்துள்ளது. மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா இது குறித்து அளித்த பேட்டியில்,"பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி அரசியலுக்கு ஆதரவளிப்பதற்காகவே இந்த மூன்று எம்பிக்களும் தங்கள் மாநிலங்களை உறுப்பினர் பதவியையும், திரிணாமுல் காங்கிரஸையும் ராஜினாமா செய்துள்ளனர்'' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/three-former-trinamool-mps-named-as-bjp-candidates-for-rajya-sabha-immediately-after-joining-the-party




