சென்னை, தமிழில் நான் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வெற்றியை எனக்கு பரிசாக அளித்த ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். என்று அனிஷ்மா அனில்குமார் கூறியுள்ளார். வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தும் அனிஷ்மா மலையாள திரையுலகில் நடித்து வந்த நடிகை அனிஷ்மா அனில்குமார், ‘சிறை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். இதையடுத்து கென் கருணாஸ் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தில் அனிஷ்மா அனில்குமார் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அனிஷ்மாவின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. தற்போது ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்துடன் இணைந்து நடித்துள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் வெற்றியடைந்து வருவது, அனிஷ்மா அனில்குமாரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெற்றியை பரிசாக அளித்த ரசிகர்களுக்கு நன்றி இதுகுறித்து அனிஷ்மா அனில்குமார் கூறியதாவது: “தமிழில் நான் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மலையாள சினிமாவைப் போலவே தமிழிலும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நிலையில், இந்த வெற்றியை எனக்கு பரிசாக அளித்த ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். தொடர்ந்து நல்ல கதைகளையும், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த படங்களில் நடித்து, அவர்களின் இதயங்களில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/delivering-consecutive-hits-anishma-is-riding-high-on-excitement



