புதுடெல்லி, இந்தியாவில் கல்வி தரத்தில் முதல் 10 மாநிலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம் என்ற தகவலும் உள்ளது. தரவரிசை பட்டியல் வெளியீடு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில், பள்ளி கல்வி வளர்ச்சி குறியீடு எப்படி உள்ளது? என்பது குறித்து ஆண்டுதோறும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-2026-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக, பள்ளி கல்வியின் வளர்ச்சி குறியீடானது, அணுகல், பங்களிப்பு, தக்கவைப்பு, தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் மதிப்பிடப்படுகிறது. இதில், பள்ளிகள் கிடைக்கும் தன்மை, சேர்க்கை மற்றும் சமத்துவம், மாணவர் தக்கவைப்பு, கற்றல் முடிவுகள் மற்றும் பள்ளி வசதிகள் போன்ற காரணிகளும் அடங்கும். தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்? 2025-2026-ம் ஆண்டிற்கான பள்ளி கல்வி வளர்ச்சி குறியீட்டு தரவரிசையில் சண்டிகர் முதல் இடம் பிடித்துள்ளது. கேரளாவுக்கு 2-வது இடம்தான் கிடைத்துள்ளது. முறையே 3-வது இடத்தை புதுச்சேரியும், 4-வது இடத்தை கோவாவும், 5-வது இடத்தை தலைநகர் டெல்லியும், 6-வது இடத்தை பஞ்சாப்பும் பிடித்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு 7-வது இடமே கிடைத்துள்ளது. கடந்த முறையைவிட தனது மதிப்பெண்ணை 0.018 அதிகரித்தாலும், 7-வது இடத்தையே தமிழ்நாட்டால் தக்கவைக்க முடிந்தது. 8-வது இடத்தை அந்தமான் நிகோபார் தீவும், 9-வது இடத்தை லட்சத்தீவும், 10-வது இடத்தை அரியானாவும் பிடித்துள்ளது. ஏனைய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அதைவிட பின்தங்கியே உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/which-are-the-top-10-states-in-india-in-terms-of-school-education-quality-what-is-tamil-nadus-rank




