சென்னை, கடமலைக்குண்டில் போராடும் மேகமலை மக்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- போராட்டம் தேனி மாவட்டம் மேகமலை - வருசநாடு பகுதிகளிலுள்ள 98 மலைக்கிராமங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 5,000க்கும் அதிகமான மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முயல்வது கொடுங்கோன்மையாகும். தங்கள் மண்ணையும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்காகக் கடமலைக்குண்டில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் நேற்று பலர் மயங்கி விழுந்த செய்தி பெரும் வேதனையளிக்கிறது. வீடுகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மக்கள் வெயிலில் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு உறுத்தவில்லையா. ஆக்கிரமிப்பாளர்கள் காடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில், அங்கு வாழும் ஒவ்வொரு குடும்பத்தின் குடியிருப்பு, வாழ்வாதாரம், நில ஆவணங்கள், சட்டப்படி கோரக்கூடிய உரிமைகள் ஆகியவற்றைத் தனித்தனியாக ஆய்வு செய்யாமல், அனைவரையும் ஒரே சொல்லில் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று அழைப்பது எவ்வகையில் நியாயம்? மக்கள் வாழும் வீடும், அவர்கள் உழைக்கும் நிலமும், குழந்தைகள் பயிலும் பள்ளியும், வெறும் கணக்கெடுப்புப் பதிவுகளா? காடுகளைக் காப்பதற்கான பொறுப்பை நிறைவேற்றும்போது மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுடையதா? இல்லையா. சீராய்வு மனு இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், மலைக்கிராம மக்களின் உண்மை நிலையை முழுமையாக முன்வைப்பதும், அவர்களுக்கு உள்ள சட்டப்பூர்வமான வழிவகைகளைப் பயன்படுத்துவதும் தமிழ்நாடு அரசின் கடமை. மக்களின் கோரிக்கைப்படி சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பை தவெக அரசு உடனடியாக சட்ட ஆய்வு செய்ய வேண்டும். வன உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள், பட்டா மற்றும் பிற ஆவணங்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தி, பாதிக்கப்படும் குடும்பங்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க, தொன்றுதொட்டு வாழும் மக்களின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களை அச்சுறுத்துவதையும், அன்றாடப் போக்குவரத்து மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையற்ற இடையூறு ஏற்படுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். போராட்டத்தில் மயக்கமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை உறுதி செய்வதுடன், குடிநீர், மின்சாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் மலைக்கிராம மக்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் தவெக அரசு நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையை கேட்டறிய வேண்டும். ஆகவே, மேகமலை மலைக்கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், அவர்களது வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். தங்கள் மண்ணில் வாழும் உரிமைக்காக அறவழியில் போராடும் மக்களுடன் நாம் தமிழர் கட்சி உறுதியாகத் துணைநிற்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/how-is-it-fair-to-call-people-occupiers-seeman-asks




