சென்னை, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின்பேரில், அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக் குழு பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது. இந்த குழு பழனி கோவில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து, கணக்கில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாய்கள், கணக்கில் வராத சொத்துகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் போன்றவை நடந்துள்ளதா? என முழுமையாக அறிக்கை தயார் செய்து அதன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும். பழனி கோவில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து கோவில் சொத்துகளை பாதுகாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இது அமையவிருக்கிறது. பழனியை தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் இதே போல் குழு அமைத்து அமைச்சர் உத்தரவின்பேரில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-protect-palani-temple-assets-hrce-department-announcement




