நிறைய படங்களை இஷ்டத்திற்குத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லையென நினைக்கிறேன் என்று நடிகை அதிதி ஷங்கர் கூறியுள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்திலும் நடித்தார். அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியுடன் ‘நேசிப்பாயா’ படத்தில் நடித்துள்ளார்.அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், ‘ஒன்ஸ் மோர்’ என்கிற படத்தில் நடித்து முடித்தார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான குரல் மற்றும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து நடித்துள்ள 'ஒன்ஸ் மோர்' திரைப்படம் ஆகஸ்ட் 28 ந் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் கூட்டணி ‘மாஸ்டர்', 'கைதி', 'விக்ரம்’ போன்ற படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், பின்னர் 'அநீதி', 'ரசவாதி', 'போர்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அவர், நடிகை அதிதி ஷங்கர் ஜோடியாக 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவான படம் ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரிலீஸ் தேதி அறிவிப்பு நீண்ட நாளாக வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், ‘ஒன்ஸ் மோர்’ படம் வருகிற ஆகஸ்ட் 28 ந் தேதி திரையங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், பேட்டியொன்றில் பேசிய நடிகை அதிதி ஷங்கர், “ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் கதையும் அதில் காட்டப்பட்ட காதலும் வித்தியாசமானது. நான் கடந்த 4 ஆண்டுகளில் நான்கு திரைப்படங்களில்தான் நடித்துள்ளேன். நிறைய படங்களை இஷ்டத்திற்குத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லையென நினைக்கிறேன். நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன். ஒன்ஸ் மோரில் என்னைவிட அர்ஜுன் தாஸுக்கு நடிகை சோனாவுடனான கேமிஸ்ட்ரி காட்சிகள் நன்றாக உள்ளன. இப்படம் குடும்பங்களுடன் பார்க்கும் காதல் நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-want-to-act-in-good-stories-actress-aditi-shankar




