சென்னை, சுதந்திர போராட்ட வீரரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியின் 109-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன். மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-the-public-welfare-initiatives-of-ramasamy-padayatchiar-chief-minister-vijay-pays-tribute



