மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து, தங்களை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக காலியான இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு முனைப் போட்டி அதன்படி, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் பரந்தாமன் (மதுராந்தகம்), சுகன்யா (தாராபுரம்) போட்டியிடுகிறார்கள். தவெக சார்பில், மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோரும் அதிமுக சார்பில் கணிதா சம்பத், பானுமதி ஆகியோரும் வேட்பளர்களர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியும் இன்று தனது வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான நான்கு முனைப் போட்டி உறுதியானது. கம்யூனிஸ்டு நிலைப்பாடு என்ன? த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இணையவில்லை. எனவே அவர்கள் தமிழகத்தில் நடக்கும் 2 தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக சலீம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்தை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.அதே நேரத்தில் த.வெ.க. கூட்டணி சார்பிலும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, யார். யாரை ஆதரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-naam-tamilar-katchi-candidates-likely-to-be-announced-today




