பெங்களூரு, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 15-ந்தேதி காலேயிலும், 2-வது டெஸ்ட் ஆகஸ்டு 23-ந்தேதி கொழும்பிலும் தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்தியாவுக்கு இந்த போட்டி முக்கியமானதாகும். போட்டிக்கு முன்பாக இந்தியா 4 நாள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாட உள்ளது. இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படுகிறது. இந்த தொடரில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் லண்டன் லாார்ட் சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட் டியில் இடது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடவில்லை. இது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகையில். 'காயத்தில் இருந்து மீள்வதற்கான பும் ராவின் பயிற்சி முறைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இலங்கை டெஸ்ட் தொட ருக்கு இன்னும் 3 வாரங்கள் உள்ளன. அவர் உடல்தகுதியை எட்டி அணியுடன் இணைவதற்கு இந்த காலஅவகாசம் போதுமானது' என்று தெரிவித்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/test-match-against-sri-lanka-will-indian-player-bumrah-play




