புதுடெல்லி எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையைத் தொடங்க இதற்கு முன்னதாக ஒப்புதல் பெறுவதில் தடைகளை எதிர்கொண்ட நிலையில், மீண்டும் விண்ணப்பித்துள்ளது. உலகின் முன்னனி தொழிலதிபர் மற்றும் உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் சேவையை உலகின் பல்வேறு நாடுகளில் விரிவுபடுத்தினார். அந்த வகையில் இந்தியாவிலும் அந்த சேவையை அறிமுகப்படுத்த முற்பட்டார். ஆனால் ஸ்டார்லிங்கின் சில விதிமுறைகள், தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்திய விதிமுறைகளுடன் பொருந்தவில்லை என்பதால் ஒப்புதல் கிடைக்கவில்லை. மாற்றங்களுடன் விண்ணப்பித்த ஸ்டார்லிங்க் இந்த நிலையில், இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியை எலான் மஸ்க் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்திடம் தற்போது, மாற்றங்களுடன் ஸ்டார்லிங்க் நிறுவனம் மீண்டும் விண்ணப்பித்துள்ளது. குறிப்பாக, இணைய இணைப்பு கிடைக்காத கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஸ்டார்லிங்க் சேவை உதவும் என அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிலளித்த எலான் மஸ்க், “ஸ்டார்லிங்க் இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், மிகக் குறைந்த சேவை பெறும் மக்களுக்கு உதவும்” எனக் கூறியுள்ளார். யாருக்கு அதிக பயன்? மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்கள் உள்ள இடங்களில் இதற்கான செல்போன் டவர் மற்றும் தரைவழி கேபிள் மூலம் இணைய சேவையை வழங்க அதன் கட்டமைப்புகளை உருவாக்குவது அதிக செலவாகும். ஆனால், இந்த சிரமம் ஸ்டார்லிங்க் இணைய சேவையில் இருக்காது. மேலும், இயற்கை பேரழிவான வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களின் போது செல்போன் டவர்கள் மற்றும் தரைவழி இணைய சேவைகள் பாதிக்கப்பட்டாலும், ஸ்டார்லிங்க் மூலம் இணைய இணைப்பை வழங்க முடியும். அதேநேரத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட பாரம்பரிய தொலைத்தொடர்பு சேவைகளுக்கு ஸ்டார்லிங்க் முழுமையான மாற்றமாக இருக்காமல், அவற்றுடன் இணைந்து செயல்படும். மேலும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில்தான் இதன் சேவை அதிகமாக இருக்கும் என்று எலான் மஸ்க் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/elon-musk-has-re-applied-to-launch-starlink-in-india




