புதுடெல்லி, இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருவதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 15 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்துள்ள வைபவ், தற்காலிகமாக பிரகாசிக்கும் வீரராக இல்லாமல், நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடி சாதிக்கும் வீரராக உருவாக வேண்டும். வைபவ் சூர்யவன்ஷி அல்லது அவரது திறமைக்கு இணையான எந்த வீரரும், சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக நீண்ட காலம் சேவையாற்றி சாதித்ததைப் போல தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். கடந்த காலங்களில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக உருவான வீரர்களைப் போல அவரும் வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/vaibhav-suryavanshis-future-bcci-secretary-responds




