புதுடெல்லி, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்லே நோப்கே, நெதர்லாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 49 வயதான நோப்கே, சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார். தற்போது அந்தப் பொறுப்பில் இருந்து விலகி நெதர்லாந்து அணியுடன் இணைந்துள்ளார். நெதர்லாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரியான் குக் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதற்காக பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, நோப்கே புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2027 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2028 டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுகளில் நெதர்லாந்து அணியை வழிநடத்துவது நோப்கேவின் முக்கிய பொறுப்பாக இருக்கும். வியூகங்கள் மற்றும் திட்டங்களுக்கு முன்பாக வீரர்களுடன் நல்ல தொடர்பை உருவாக்குவதுதான் எனது அணுகுமுறை என்று நோப்கே தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/new-change-in-netherlands-cricket-head-coach-ashley-noffke




