சென்னை, தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’, ‘சர்தார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது நடிகர் கார்த்தியை வைத்து ‘சர்தார் 2’ படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் அளித்த பேட்டி ஒன்றில், தனது இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஆகியோர் நடிக்கும் புதிய இந்தி படம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தயாரிப்பு நிறுவனத்திடம் இது குறித்து பேசி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த படத்தை ஒரு பெரிய புராண சாகச(Mythological Adventure) கதையாக உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த பி.எஸ்.மித்ரன், ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்தால் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/new-film-starring-dhanush-and-kareena-kapoor-director-psmithran-shares-details




