ஒன்டாரியோ, உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் அனஹத் சிங் 11-3, 8-11, 11-4, 11-6 என்ற செட் கணக்கில் எகிப்தின் பார்ப் சமேயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் இறுதிசுற்றை எட்டுவது கடந்த 21 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2005-ம் ஆண்டில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/world-junior-squash-indian-player-advances-to-the-final




