சென்னை, லுக் அவுட் நோட்டீஸ் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியதோடு, தேடப்படும் நபராக அறிவித்து 'லுக் அவுட்' நோட்டீசையும் பிறப்பித்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கையும், லுக் அவுட் நோட்டீசையும் ரத்து செய்ய வேண்டும் என்று 2 மனுக்களை ஐகோர்ட்டில் எ.வ.வேலு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது எ.வ.வேலு தரப்பில் மூத்த வக்கீல்கள் பி.வில்சன், சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி, "அரசின் முன்அனுமதி பெறாமல் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். கவர்னர் ஒப்புதல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இதில் அரசுக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. விதிகள் மீறப்பட்டதாக அதிகாரிகள் மீது ஏற்கனவே துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசியல் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த லுக் அவுட் நோட்டீசையும், வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்" என்று வாதாடினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்தியன், “எ.வ.வேலு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவி வகிக்கும்போது, 2022-ம் ஆண்டு சாலை அமைக்காமலேயே 77 சதவீத தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்து விட்டனர். இதுகுறித்து முன் னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந்தேதி புகார் செய்தார். உடனே சாலை வேக வேகமாக போடப்பட்டது. இதுநாள் வரை அந்த சாலைக்கும் தரச்சான்று கொடுக்கப்படவில்லை. ஆனால், பணம் முன்கூட்டியே. அதுவும் பணி முடிவதற்கு முன்பே 85 பணிகளுக்காக ரூ.195 கோடியை ஒப்பந்ததாரர்க ளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, வழக்கு தொடர அனுமதியளிக்க தகுதியான அதிகாரி யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. எனவே, கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மனுதாரர் கூறமுடியாது" என்று வாதிட்டார். லுக் அவுட் நோட்டீசுக்கு தடை இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "எ.வ.வேலு வருகிற 12-ந்தேதி (நாடு திரும்புவதால், அவர் 15-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இந்த நிபந்தனையுடன் லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். வழக்கை ரத்து செய்யக்கோரும் மற்றொரு மனுவுக்கு போலீசார் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதுவரை எ.வ.வேலுவை கைது செய்யக்கூடாது என்று தடை விதிக்கவேண்டும் என்று மூத்த வக்கீல் பி.வில்சன் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி, வருகிற 28-ந்தேதி வரை எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை போலீசார் எடுக்கக்கூடாது" என்று உத்தரவிட்டார். மேல்முறையீடு இந்த நிலையில், எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், அவசர வழக்காக நாளையே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/stay-on-lookout-notice-against-ev-velu-appeal-in-supreme-court




