விழுப்புரம், அனுமதியின்றி இயக்கிய மினி பேருந்துகளை சிறைபிடித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அப்பம்பட்டு பகுதியில் புதிய வழித்தடங்களில் அனுமதியின்றி மினி பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று விதிகளை மீறி இயக்கிய 3 தனியார் மினி பேருந்துகளை ஆட்டோ ஓட்டுநர்கள் சிறைபிடித்து தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, விதிகளை மீறி புதிய வழித்தடங்களில் இயக்கப்படும் மினி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-drivers-protest-by-capturing-mini-buses-that-were-operating-without-permission




