சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒடிசா மாநிலம் பாலசோர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ள இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * விழுப்புரத்தில் இருந்து வருகிற ஆகஸ்டு 4-ந்தேதி காலை 11.05 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(வண்டி எண்.22604), மறுமார்க்கமாக காரக்பூரில் இருந்து வருகிற ஆகஸ்டு 6-ந்தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22603) ரத்து செய்யப்படுகிறது. * அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22504), மறுமார்க்கமாக கன்னியாகுமரில் இருந்து ஆகஸ்டு 7-ந்தேதி மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22503) ரத்து செய்யப்படுகிறது. * மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து ஆகஸ்டு 3-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(22605), அதற்கு மாற்றாக, புருலியாவில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து ஆகஸ்டு 5-ந்தேதி அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு புருலியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(22606), அதற்கு மாற்றாக நெல்லையில் இருந்து ஒரு மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு புருலியா செல்லும். * மேற்கு வங்க மாநிலம் சாலிமாரில் இருந்து ஆகஸ்டு 4-ந்தேதி மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(22825), ஒரு மணி நேரம் தாமதமாக சென்டிரல் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/cancellation-of-kanyakumari-dibrugarh-vivek-express-southern-railway-announcement




