சென்னை, சர்வதேச நெகிழிப்பையில்லா நாளை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மருத்துவர் வே. க. ராஜீவ் தலைமையில் சென்னை மயிலாப்பூர் மற்றும் கோயம்பேடு சந்தைகளில் நெகிழி பயன்பாட்டிற்கு எதிரான தீவிர விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- விழிப்புணர்வு நிகழ்ச்சி சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' முன்னிட்டு, நெகிழிப்பைகள் மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை தவிர்த்து, துணி பைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறு பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள கடை வீதி மற்றும் சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வே. க. ராஜீவ் தலைமையில் ஒரு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் வெங்கடரமணன் மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், நெகிழிப்பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமை குறித்தும், கழிவுகளை அகற்றுவதில் தூய்மை பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தையும் எடுத்துரைத்தார். எனவே, இந்த சர்வதேச நெகிழிப்பையில்லா தினத்தில் நெகிழி பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்தும் மாற்றம் நம்மிடமிருந்து துவங்கவேண்டும் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தினார். துணிப்பைகள் இந்நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மருத்துவர் வே. க. ராஜீவ் சிறப்புரை ஆற்றினர். அமைச்சர், நெகிழி மாசுபாட்டை எதிர்கொள்வதில் மத்திய மற்றும் மாநில அரசின் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி மாசுபாட்டை எதிர்கொள்வது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், நெகிழிமாசில்லா தமிழகத்தை உருவாக்குவதில் தனிநபர் பொறுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது மட்டுமல்லாமல், நெகிழிப்பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துவதை அன்றாட பழக்கமாக மாற்றிக்கொள்ளுமாறும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை ஒரு நிலையான வாழ்க்கை முறையாக கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். கையெழுத்து இயக்கம் மேலும் இந்நிகழ்வின் போது, நெகிழிப்பைகளை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை கடைபிடிப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச நெகிழிப்பையில்லா தின உறுதிமொழி ஏற்கப்பட்டு கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. காலநிலை வீரர்கள் திட்டம் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் பழைய துணிகளை பயன்படுத்தி துணிப்பைகள் தைத்து பொதுமக்களுக்கு வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும், காலநிலை வீரர்கள் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களின் விழிப்புணர்வு அரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் பார்வையிட்டார். இரண்டாயிரம் துணிப்பைகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் அனுராக் மிஸ்ரா, உறுப்பினர் செயலர் சரவணகுமார், வாரியத்தின் மூத்த அதிகாரிகள், கோயம்பேடு அங்காடி நிர்வாக குழுவின் நிர்வாக அதிகாரி இந்துமதி மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள சந்தை மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை பகுதிகளில் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விற்பனை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டாயிரம் துணிப்பைகள் வழங்கப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajeev-raises-awareness-on-international-plastic-bag-free-day




