பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, மாலி அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பமாகோ உள்பட பல்வேறு நகரங்கள் மீது அல்கொய்தா உள்பட பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். வடக்கு மாலியை தனிநாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்கு எதிராக தாக்குதலை கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்கள் மீட்பு அதேவேளை, இந்த உள்நாட்டு போரில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை பயங்கர்வாதிகள் கடத்திச்சென்றுள்ளனர். அவ்வாறு கடத்தப்பட்ட ராணுவ வீரர்களை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்களில் 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட ராணுவ வீரர்கள் 80 பேரும் 2023ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டவர்கள் ஆவர். அதேவேளை, பயங்கரவாதிகள் பிடியில் இன்னும் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/mali-bayangkaravathigalal-kadaththappatta-ranuva-veerkal-82-per-meetpu




