இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘திரைப்படத்தில் தலைமைத்துவம்’ லீடர்ஷிப் இன் சினிமா என்ற விருது வழங்கி கவுரவப்படுத்தவிருக்கிறார். 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான ‘காந்தாரா’-வின் மூலம், திரைக்கதை எழுதி, இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்து, இந்திய அளவில் பிரபலமானார், நடிகர் ரிஷப் ஷெட்டி. இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ‘காந்தாரா: அத்தியாயம் 1’ என்ற படத்தையும் வெளியிட்டார். தற்போது ‘ஜெய் ஹனுமான்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். மெல்பர்ன் இந்திய திரைப்பட விழா வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் 36 மொழிகளில் 130க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இதில் நடுவராக ரிஷப் ஷெட்டி கலந்துகொள்ளவிருக்கிறார். NAB IFFM Awards Night 2026 is here!✨ Palais Theatre, Melbourne August 13, 2026 6:00 PM Stars, glamour, and pure magic, is almost here! Grab your tickets before they sell out. ️ — Indian Film Festival of Melbourne (@IFFMelb) July 24, 2026 இந்த நிலையில், ரிஷப் ஷெட்டிக்கு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான ‘திரைப்படத்தில் தலைமைத்துவம்’- லீடர்ஷிப் இன் சினிமா என்ற விருது வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கலாசாரத்தை உலக அளவில் கொண்டு சென்றதற்காக இந்த விருது ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரிஷப் ஷெட்டி, “இந்த விருதைப் பெறவிருப்பதில் மிகுந்த கவுரமாகவும் கருதுகிறேன். கதை சொல்லல் என்பது நமக்கு உத்வேகம் அளித்த நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் விதமாகவே இருக்கிறது. நமது பாரம்பரியம் மிகுந்த உள்ளூர் கதைகள் உலக அளவில் பொருந்தும்படி இருப்பது மிகவும் வியக்கத்தக்க அர்த்தமாக இருக்கிறது. மெல்போர்ன் செல்லவும் மற்ற திரைப்பட கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/rishabh-shetty-to-be-honoured-at-melbourne-indian-film-festival




