முதல் பட வாய்ப்பு தேடும் அந்த உதவி இயக்குநர்களுக்கு முடிந்தால் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று இயக்குநர் ராஜா கருப்பசாமி கேட்டுக் கொண்டார். அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கிய ‘மொத ராத்திரி’ படம் அனைத்து தரப்பு மக்களிடையே மிகுந்த கவனம் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. திரையரங்கில் எதிர்பார்த்ததைவிடவும் மிகப் பெரிய வசூலை ஈட்டியுள்ள இந்த படம், கடந்த 21 ஆம் தேதி அன்று ஓடிடி தளத்தில் வெளியானது. இதிலும், இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமன்றி, விமர்சகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இப்படத்திற்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட ராஜா கருப்பசாமி, “இந்த மேடையில் ஒரே ஒரு கோரிக்கையை வைக்கிறேன். எனக்குத் தெரிந்து, என்னுடைய நண்பர்களே 10 கதைகளை வைத்திருக்கிறார்கள். எப்படியாவது ஒரு நல்ல படம் பண்ண வேண்டும் என்று அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். என்னை விட நல்ல கதைகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். முதல் பட வாய்ப்பு தேடும் அந்த உதவி இயக்குநர்களுக்கு முடிந்தால் ஏதாவது உதவி செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/modha-rathiri-film-director-asked-for-help-from-those-assistant-directors-looking-for-opportunities




