செயின்ட் லூயிஸ், சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டியின் 5-வது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா கண்டார். சின்க்பீல்டு கோப்பை கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்று மோதி வருகிறார்கள். இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞா னந்தா, அமெரிக்க வீரர் வெஸ்லி சோவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 26-வது நகர்த்தலில் டிரா கண்டார். இதேபோல் ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்)-சாமுவேல் செவியன் (அமெரிக்கா). ஜோர்டான் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து) -மேக்ஷிம் வாஷிர் (பிரான்ஸ்) இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது. 2-வது இடம் 5-வது சுற்று முடிவில் வெஸ்லி சோ 3% புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பேபியானோ கருணா, மேக்ஸிம் வாஷிர், வின்சென்ட் கீமர். பிரக்ஞானந்தா தலா 3 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/sinquefield-cup-chess-praggnanandhaa-draws-in-round-5




