மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி. ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 28) அன்று நடைபெற்றது. மண்டாடி இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "எனக்கு மண்டாடி மிகவும் ஸ்பெஷலான ஒரு படம். ஏன்னென்றால் இப்படத்தின் இயக்குநர் மதிமாறன். எனக்கு வெற்றிமாறன் என்று பெயர் வைத்தது மதிமாறனின் அப்பா தான். எனக்கு தகுதி இருந்தால் மட்டுமே பணிபுரிய வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நபர் மதிமாறன். என்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். "சாப்பிட்டியான்னு கேட்டேன், அதுக்கு என் மகன் வயிறு நிறைய தண்ணி குடிச்சிட்டு."- கலங்கிய சூரி அம்மா சூரி மாதிரியான ஆட்கள் தான் நாம் எவ்வளவு கடினமான வேலைகள் கொடுத்தாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். ஒரு சில கதாபாத்திரங்கள் மனதளவில் பண்ண வேண்டும் தோன்றும் ஆனால் உடல் அளவில் பண்ண முடியாமல் இருக்கும். அதேசமயம் உடல் அளவில் தகுதியாக இருந்தாலும் சில சமயங்களில் மனதளவில் நடிக்க முடியாமல் போய்விடும். நடிகர் சூரி ஆனால் மனதளவிலும், உடல் அளவிலும் மிகவும் ஸ்டிராங்காக இருக்கக்கூடிய ஒரு நபர் தான் சூரி. அவருடைய இந்த வளர்ச்சியை அவர் மதிக்கிறார். அதுதான் இயக்குநர் ஒரு விஷயம் கேட்டால் அதை செய்யக்கூடிய ஆற்றலை சூரிக்கு தருகிறது. சூரி நீங்கள் கண்டிப்பாக இந்த மாதிரி நிறைய சவாலானக் கதாபாத்திரங்கள் பண்ண வேண்டும்" என்று பாராட்டி பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/vetrimaaran-about-soori-in-mandaadi-audio-launch



