டோக்கியோ, ஜப்பான் நாட்டின் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் க்யூஷா தீவில் குமாமடோ நகரை மையமாக கொண்டு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/magnitude-71-earthquake-shakes-part-of-southern-japan-tsunami-advisory-issued




