சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560-ம், கிராமுக்கு ரூ.70-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,940-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் 14,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளியை பொறுத்த வரையில் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும் ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-twice-in-a-single-day-whats-the-status




