மத்தியபிரதேசம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகு தன்னை மருத்துவமனையில் இருந்து அழைத்துச்செல்லும்படியும், இவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அப்பெண் தனது உறவினர்களிடம் கெஞ்சிய வீடியோ வைரலானது. அதோடு மருத்துவமனை படுக்கையில் இருந்து எழுந்து உறவினர்களிடம் ஓடிய அப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து நிறுத்தி செல்ல விடாமல் தடுத்த வீடியோவும் வெளியாகி இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக கல்பனாவும், அவர் பெற்றெடுத்த குழந்தையும் அடுத்த சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போது மருத்துவமனையின் சூப்பிரண்டெண்ட் டாக்டர் ராகுல் மிஸ்ரா இறந்து போன கல்பனா மிஸ்ராவின் குடும்பத்தினருடன் உரையாடிய வீடியோ வைரலாகி பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்துள்ளது. சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை கல்பனாவின் சிகிச்சை மற்றும் மரணம் குறித்து மருத்துவமனையில் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியபோது, ``உங்கள் 22 வயது சகோதரியை கர்ப்பமாகிவிட்டீர்கள்" என்று ஒரு குடும்ப உறுப்பினரிடம் டாக்டர் மிஸ்ரா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் டாக்டர் மிஸ்ரா இக்குற்றச்சாட்டை மறுத்தார். பின்னர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இச்சர்ச்சையை தொடர்ந்து சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து டாக்டர் ராகுல் மிஸ்ராவை மத்தியப் பிரதேச அரசு நீக்கியுள்ளது. ஆனால் நீக்கத்திற்கான காரணத்தை குறிப்பிடவில்லை. இது குறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில்,'' அரசு டாக்டர் மிஸ்ராவை பாதுகாக்கிறது. துணை முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜேந்திர சுக்லாவுடன் டாக்டர் மிஸ்ராவுக்கு தொடர்பு இருக்கிறது. எனவேதான் தாமதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகள் இருப்பதால் டாக்டர் மிஸ்ரா ஏன் தனது பதவியில் தொடர்கிறார் என்று பட்வாரி கேள்வி எழுப்பினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/did-you-impregnate-your-sister-mp-doctor-questions-brother-of-woman-who-died-after-childbirth




