மியாமி நார்வே நட்சத்திர வீரரின் பெரிய தவறால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்த சம்பவம் ஏற்பட்டு உள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று (நாக்-அவுட் சுற்றுகள்), 3-வது சுற்று போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். அலெக்சாண்டர் சொர்லோத் அந்த வகையில், அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் மியாமி மைதானத்தில் நடந்த காலிறுதி போட்டி ஒன்றில் நார்வே மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், நார்வே முன்கள வீரரான அலெக்சாண்டர் சொர்லோத், பந்து தனக்கு வந்தபோது, அதனை மற்றொரு நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலந்துக்கு ‘பாஸ்’ செய்ய தவறினார். பந்து ‘பாஸ்’ செய்யப்பட்டால் ஸ்கொயரிங் அடிப்படையில் கோல் அடிக்கப்பட்டு இருக்கும். அப்போது இங்கிலாந்து தரப்பில் தடுப்பு ஆட்டக்காரரான ஜான் ஸ்டோன்ஸ் ஒருவரே இருந்தபோதும், அதனை பயன்படுத்தி ஹாலந்துக்கு ‘பாஸ்’ செய்து, எளிதில் கோல் விழுவதற்கான வாய்ப்பை சொர்லோத் தவற விட்டார். அதற்கு பதிலாக, அவரே கோல் போடும் நோக்கில் தொடர்ந்து முன்னேறினார். அப்போது, ஹாலந்து தன்னிடம் ‘பாஸ்’ செய்யும்படி சைகை காட்டியும், அதனை மதிக்காமல் சொர்லோத் செயல்பட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. பெரிய தவறு சற்று நேரத்தில் அவரை இங்கிலாந்தின் 5 வீரர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால், பந்து தடுக்கப்பட்டு, கோல்கீப்பரின் கைக்கு போனது. கோல் வாய்ப்பும் நழுவியது. அதுவரை நார்வே 1-0 என முன்னிலையில் இருந்தது. போட்டியில் அந்த கோல் அடிக்கப்பட்டால், 2 கோல் முன்னிலையுடன் நார்வே எளிதில் வெற்றி பெறும் சூழல் இருந்தது. ஆனால், தானே கோல் அடித்து பெருமை பெற வேண்டும் என்ற சொர்லோத்தின் சுயநல முடிவால், நார்வே அணி அரையிறுதி வாய்ப்பையே இழக்கும் சூழல் ஏற்பட்டது என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். களத்திலேயே, ஏமாற்றத்தின் வெளிப்பாட்டை எர்லிங்கிடம் காண முடிந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது உலகக்கோப்பையில் நடந்த மிகப்பெரிய தவறு என பலரும் விமர்சித்து வருகின்றனர். watch this angle. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/norway-loses-semi-final-chance-due-to-a-major-blunder-by-a-star-player-viral-video




