மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; குழந்தை அழும்போதே கவனிக்காமல் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதற்கு பதில், தடியடி கிடைத்தால் நாடு தோற்றதாகவே அர்த்தம். குழந்தை அழும்போதே கவனிக்காமல், நம் குழந்தைகள் பலர் இறக்கும் வரை காத்திருந்துவிட்டோம்; குழந்தைகள் தங்கள் கடமையைச் செய்துவிட்டார்கள்; அவர்களுக்கான கடமையை செய்வது நாட்டின் பொறுப்பு மிகவும் சிறப்பானவர் சோனம் வாங்சுக், நீங்கள் நாட்டுக்குத் தேவைப்படுகிறீர்கள். எனவே, இந்தியாவின் மாணவர்களுக்காக உங்களுடைய உண்ணாவிரதத்தை நீங்கள் முடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு மிகவும் சிறப்பானவர். உங்களது வேலையை நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள். நாடு உங்களுக்குத் தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. எங்களுடைய தோல்விகளை விட உங்களுடைய கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். டெல்லி போராட்டம், நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் பேரணியைக் களைத்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டம் விரிவடைந்து வருகிறது. இந்த சூழலில், கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/if-one-receives-a-lathi-charge-instead-of-answers-to-questions-it-means-the-country-has-failed-kamal-haasan




