ஈரோடு, ஈரோடு மாவட்டம், பவானி ரிங்ரோடு ஆற்றங்கரை பகுதியில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒரு வாலிபரை கைது செய்தனர். கஞ்சா பதுக்கல் ஈரோடு மாவட்டம், பவானி ரிங்ரோடு ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அங்கு சந்தேகப்படும்படி நின்ற புதுச்சேரியைச் சேர்ந்த பல்லா வெங்கட் சிவராம் (வயது 24) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். 20 கிலோ கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது அதில் அவர் மொத்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து ஆற்றுப்பகுதியில் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 20 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-rs10-lakh-worth-of-ganja-seized-on-riverbank-youth-arrested




