ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி இந்தப் படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு இந்தநிலையில், பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்ட படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ranbir-kapoors-ramayana-film-trailer-release-date-announced




