ஃபிளைதுபாய் விமானச் சம்பவத்தில் கத்திக் குத்து காயம்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரை நேற்று இந்தியப் பிரதமர் மோடி. “உண்மையான வீரர். உங்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியிருந்தார். அபுதாபியில் மேல்சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சாரிடம் வீடியோ காலில் பேசினார் மோடி. அப்போது மோடி, “முழுத் தேசத்தையும் நீங்கள் பெருமையடையச் செய்துள்ளீர்கள். மோடிஸ்மித் மிச்சாருக்குக் கத்திக்குத்து, விபரீதத்திற்குக் காரணமான விமானி யார்? - இதுவரை கிடைத்த தகவல்கள் காத்திருக்கிறது. பாரதம் உங்களை அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறது. நேற்றைய தினம் உங்கள் உடல்நலனுக்காக நாடு முழுவதிலும் உள்ள கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. உங்களுக்குச் சிறந்த முறையில் பராமரித்துச் சிகிச்சையளித்த சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், என்னைத் தொலைபேசியில் அழைக்கலாம்” என்று பேசினார். ஸ்மித் மிச்சார் பேச்சு மோடியிடம் ஸ்மித் மச்சார், “நீங்கள்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய வழிகாட்டி. இன்று நீங்கள் என்னை ஊக்கப்படுத்திய விதம் எனக்கு மிகுந்த பெருமிதம் அளிக்கிறது. எனக்குக் கடுமையான பல காயங்கள் இருந்தன. ஆனால் ‘நான் எழுந்து செயல்பட்டே ஆக வேண்டும்’ என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அந்த இக்கட்டான சூழலில், என்னை நானே உந்தித் தள்ளி, காக்பிட் கதவைத் திறந்தேன். எனக்கு எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் ஹனுமான் சாலிசாவைச் சொல்வேன். ஸ்மித் மச்சார்வெற்றிப் பயணத் திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்; எந்தெந்தப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்? அந்த நேரத்திலும் கூட, நான் ஹனுமான் சாலிசாவை மட்டுமே தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். இன்று உங்களிடமிருந்து வந்த இந்த ஒரு அழைப்பு, எனக்கு உண்மையிலேயே மிகவும் பெருமை. உங்களிடம் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை” என்று பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/pm-modi-speaks-to-injured-flydubai-pilot-smit-machchhar




