செங்கல்பட்டு, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 5 முனை போட்டி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 5 முனை போட்டி நிலவுவதால், ஒவ்வொரு கட்சி பிரமுகர்களும் மதுராந்தகத்தில் முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி இந்த வாரத்தில், கட்சிகளின் தலைவர்கள், 2 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நாளையுடன் முடிவடைகிறது அந்தவகையில், மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பரந்தாமனை ஆதரித்து, அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதில், கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நேற்றுவரை தீவிரமாக நடைபெற்றது. வரும் செவ்வாய்க்கிழமை (6- ந்தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், நாளையுடன் 2 தொகுதிகளிலும் பிரசாரம் முடிவடைகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-campaigns-in-maduranthakam-today




