கோவை, கோவையில் ரெட்பீல்டு பகுதியில் அமைந்துள்ள இந்திய கடற்படை பயிற்சி மையமான ஐ.என்.எஸ். அக்ரானியில் பயிற்சி பெறுவதற்காக வந்த 31 வயதான பிரதீப் முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரியிடம் இந்திய கடற்படையின் ரகசிய பாதுகாப்புத் தகவல்களை அவர் கசியவிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆந்திரப் பிரதேச காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி, இந்திய கடற்படையின் விசாகப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார். கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஒரு வாரமாக அவர் அங்கு தங்கியிருந்தார். இந்த நிலையில், சமூக ஊடகம் வாயிலாக பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளி ஒருவர் பிரதீப் முகர்ஜியை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளம் தொடர்பான தகவல்களை பிரதீப் முகர்ஜி பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பயங்கரவாத குழுக்கள், எல்லை தாண்டிய உளவு நடவடிக்கைகள் மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஆந்திரப் பிரதேச காவல்துறையின் சி.ஐ. சிறப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து, பிரதீப் முகர்ஜியை கைது செய்வதற்கு இந்திய கடற்படை அதிகாரிகளிடம் சிறப்புப் பிரிவு அனுமதி பெற்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-navy-officer-arrested-for-spying-for-pakistan




