திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நகை திருட்டு திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குறளரசன். அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இன்று (வியாழக்கிழமை) மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவின் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்பியோடினர். போலீஸ் விசாரணை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்து நகைகள் திருடப்பட்டதைக் கண்டு குறளரசன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து குறளரசன் திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட திருவள்ளூர் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மற்றும் தடயங்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், இந்த திருட்டில் ஈடுபட்ட சஞ்சய் மற்றும் ஆகாஷ் ஆகிய 2 பேர் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-arrested-for-breaking-the-lock-of-a-house-and-stealing-jewelry




