ஜெகதல்பூர் சத்தீஷ்காரில் ஏற்பட்ட சாலை விபத்தில் மந்திரி உயிர் தப்பினார். 6 பேர் காயம் அடைந்தனர். சத்தீஷ்காரில் வனத்துறை மந்திரியாக இருப்பவர் கேதர் காஷ்யாப். தன்னுடைய பர்சாகுடா கிராமத்தில் இருந்து கொண்டாகாவன் நோக்கி காரில் சென்றுள்ளார். கூட பாதுகாப்பிற்காக போலீசார் அடங்கிய வாகனமும் சென்றது. 6 பேர் அப்போது, பஸ்தார் மாவட்டத்தில், பான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மந்திரியின் வாகனம் வந்தபோது, இவருடைய வாகனம் மற்றும் பாதுகாப்பிற்காக வந்த வாகனம் ஆகியவற்றின் மீது திடீரென சொகுசு கார் ஒன்ற மோதியது. இதில், பாதுகாப்பு வாகனம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில், காஷ்யப்பின் தனி உதவியாளர், 4 போலீசார் மற்றும் பாதுகாப்பு வாகனத்தின் ஓட்டுநர் என 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். வனத்துறை மந்திரி காஷ்யப் காயங்கள் எதுவுமின்றி தப்பி விட்டார். சொகுசு கார் பலத்த சேதமடைந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/road-accident-in-chhattisgarh-minister-escapes-unhurt-6-injured




