புதுடெல்லி, மின் வாகனங்களின் பேட்டரிகளை மொபைல் போன்கள் மூலம் முடக்க தவறாக பயன்படுத்தப்பட்ட BAT-BMS, SMART BMS, LOSSIGY உள்ளிட்ட 7 செயலிகளை உடனடியாக நீக்க கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் உள்ள புளூடூத் (Bluetooth) குறைபாட்டை பயன்படுத்தி, இந்த செயலிகள் மூலம் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களை சட்டவிரோதமாக திடீரென ஆப் செய்ய முடியும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலி உருவாக்குபவர்களுக்கும் இந்த அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளனவா அல்லது பாதிப்புக்குள்ளாக கூடிய பேட்டரி அமைப்புகளை தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசாங்கம் தெரிவிக்கவில்லை. முன்னதாக மின் வாகன டிரைவரின் அனுமதியுடன் நடத்தப்பட்ட ஒரு சோதனையில், பாதுகாப்பற்ற புளூடூத் வசதி கொண்ட BMS உடன் இணைந்த பிறகு, HT நிறுவனத்தால் செயலிகளில் ஒன்றை பயன்படுத்தி அந்த மின் வாகனத்தை செயலிழக்க செய்ய முடிந்தது. இந்த செயலிகள் பேட்டரியின் ஆரோக்கியம் — மின்னழுத்தம், வெப்பநிலை, மின்னோட்டம் ஆகியவற்றைக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதுகாப்பற்ற புளூடூத்துடன் இணைக்கப்படும்போது, இணக்கமான லித்தியம்- பேட்டரிகளுக்கான மின்சாரத்தையும் துண்டிக்க முடியும் என்று கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/govt-orders-apple-and-google-to-take-down-7-mobile-apps-that-stall-e-rickshaws




