சென்னை, இன்ஸ்பெக்டர்பாலியல் தொல்லை பிடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று பெண் போலீஸ் பரபரப்பு புகாரின் பேரில் விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்று வருகிறது. கமிஷனரிடம் பரபரப்பு புகார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் குறைதீர்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. போலீ சாரிடம் கமிஷனர் அமல்ராஜ் மனுக்களை பெற்றார். அப் போது அவரிடம் ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் 37 வயதுடைய பெண் போலீஸ் ஒரு வர் சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் பெண் போலீஸ் கூறியிருப்பதாவது:- நான் போலீஸ்காரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் தியாகராயநகர் போலீஸ் சரகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றினேன். அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் நெருக்கமாக இருந்தேன். பின்னர், தாலி கட்டிய காதல் கணவருக்கு துரோகம் செய்து விட்டதை உணர்ந்து மனம் வருந்தினேன். அதன்பின்னர் இன்ஸ்பெக்டருடனான ரகசிய உறவை கைவிட்டேன். காப்பாற்றுங்கள். அந்த இன்ஸ்பெக்டர் தன்னுடன் நெருக்கமாக எடுத்துகொண்ட புகைப்படங்களை செல்போனில் வைத்துள்ளார். அந்த புகைப் படங்களை வைத்து மிரட்டி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருகிறார். எனவே அவரது பாலியல் தொல்லை பிடியில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த பெண் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தலைமை யில் இயங்கும் விசாகா கமிட்டி விசாரணைக்கு கமிஷனர் அமல்ராஜ் பரிந்துரைத்துள்ளார். அதன்பேரில் விசாகா கமிட்டி அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/save-me-from-the-inspectors-sexual-harassment-female-police-officer-makes-sensational-complaint




