சென்னை, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு; மதுரை விமானநிலையம்: 104 டிகிரி பாரன்ஹீட் திருச்சி: 100.58 டிகிரி பாரன்ஹீட் மதுரை நகரம்: 102.56 டிகிரி பாரன்ஹீட் கடலூர்: 100.4 டிகிரி பாரன்ஹீட் திருத்தணி: 101.3 டிகிரி பாரன்ஹீட் நாகை: 100.4 டிகிரி பாரன்ஹீட் சென்னை நுங்கம்பாக்கம்: 100.9 டிகிரி பாரன்ஹீட் தஞ்சாவூர்: 100.4 டிகிரி பாரன்ஹீட் மீனம்பாக்கம்: 100. டிகிரி பாரன்ஹீட் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/weather/temperatures-hit-the-century-mark-100f378c-in-nine-locations-across-tamil-nadu




