சென்னை, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் ஏராளமான இளைஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் பொதுப்போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. டெல்லியின் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராடும் இளைஞர்களை அப்புறப்படுத்த டெல்லி போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வருகின்றனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. டெல்லியை தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் இளைஞர்கள், மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி, போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள் மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/public-barred-from-entering-chennais-marina-beach




