வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிலவு அமெரிக்காவுக்குச் சொந்தமானது என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விண்வெளி ஒப்பந்தம் அமெரிக்கா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ள 1967 விண்வெளி ஒப்பந்தத்தின்படி (Outer Space Treaty), நிலவு அல்லது விண்வெளியில் உள்ள எந்தவொரு கோளையும் எந்தவொரு நாடும் தனது சொந்தமாக உரிமை கொண்டாட முடியாது. இத்தகைய உரிமைக் கோரல்கள் 1967 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சாட்டிலைட் மற்றும் விண்வெளி ஒப்பந்தத்திற்கு (Outer Space Treaty) எதிரானது. இந்த ஒப்பந்தத்தின்படி, நிலவு மற்றும் இதர வான்வெளிகள் மீது எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாட முடியாது. இந்த ஒப்பந்தத்தின்படி, விண்வெளியை அனைத்து நாடுகளும் சுதந்திரமாக ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். மனிதகுலத்திற்கான நலன் மேலும், மனிதகுலம் அனைத்தின் நலனுக்காகவும் அந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும், நிலவு போன்ற துணைக் கோள்களையும், செவ்வாய், சனி போன்ற கோள்களையும், எந்தவொரு நாடும் சொந்தம் கொண்டாடக்கூடாது, விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தக் கூடாது, தங்களது விண்வெளி செயல்பாடுகளுக்கு அந்தந்த நாட்டின் அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நிலவுக்குச் சொந்தம் கொண்டாடி இருப்பது, உலக நாடுகளின் ஒட்டுமொத்த அதிருப்தியையும் பெற்று இருக்கிறார். அதாவது, டிரம்ப், தனது ட்ரூத் சோசியல் மீடியாவில், பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். நிலவின் மையத்தில் அமெரிக்க கொடி இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து, ’நிலவு நம்முடையது’ என்று அந்தப் பதிவில், டிரம்ப் கூறியுள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்காவிற்கு தான் சொந்தம் என்றும் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/moon-is-ours-trump-shares-post-claiming-us-ownership-over-earths-natural-satellite




