மகாராஷ்டிராவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, தானே, கோலாப்பூர் போன்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மலைப்பகுதிகள் இருக்கின்றன. இந்த மலையில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர், சாலை வசதி கிடையாது. இதனால் அவர்களது குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதாக இருந்தால் பல கிலோமீட்டர் தூரம் மலையில் நடந்து சென்று பள்ளியை அடையவேண்டும். கோலாப்பூர் மாவட்டத்தில் மலைக்குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் இரண்டு சகோதரிகளுக்காக ஆசிரியர் ஒருவர் தினமும் 10 கிலோமீட்டர் மலையில் ஏறிச்சென்று கொண்டிருக்கிறார். மூன்று வீடுகள் மற்றும் மின்சாரம் கூட இல்லாத அந்தச் சிறிய குக்கிராமமான கவல்டெக் தங்கர்வாடா, கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்களில் ஒன்றாகும். மலையின் மீது அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிக்கு மோட்டார் சைக்கிள் செல்ல முடியாத நிலை உள்ளது. இக்கிராமத்திற்குச் செல்லும் காட்டில் காட்டு நாய்கள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் உள்ளன. மாணவிகளுடன் மிதாரி ஆனாலும் ஜீவன் மிதாரி என்ற ஜில்லா பரிஷத் ஆசிரியர் காவல்டெக் தங்கர்வாடாவில் உள்ள பள்ளியை அடைவதற்காக ஒவ்வொரு நாளும் அந்த மலையில் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவரது இரண்டு மாணவிகள் எட்டு மற்றும் ஐந்து வயது சகோதரிகள், படிப்பைக் கைவிடாமல் படித்து வருகின்றனர். அவர் தான் வசிக்கும் காலே கிராமத்தில் இருந்து 28 கிமீ ஒருவழிப் பயணமான காவல்டெக் தங்கர்வாடாவுக்கு 13 வருடங்களாகச் சென்று கொண்டிருக்கிறார். பாடிக்கொண்டே செல்வேன் கனமழையைத் தாங்கும் வகையில் இரட்டை மழை கோட் அணிந்து கொண்டு செல்லும் மிதாரி தனது மோட்டார் சைக்கிளை மலையின் அடிவாரத்தில் நிறுத்திவிட்டு, ஹெல்மெட் அணிந்து கொண்டு கிட்டத்தட்ட 3-கிமீ செங்குத்தான சரிவில் நடந்து, வழுக்கும் மேற்பரப்பில் கவனமாக அடியெடுத்து வைத்து, வனப்பகுதியில் பூச்சிகளை விரட்டியபடியே தான் செல்லவேண்டிய இடத்திற்குச் செல்கிறார். இது குறித்து மிதாரி கூறுகையில், "நான் நடந்து செல்லும்போது அடிக்கடி காட்டு விலங்குகளைச் சந்திப்பேன். எனவே நடக்கும் போது நான் பாடுகிறேன் அல்லது சத்தம் போடுவேன். அவர்களும் விலகிச் செல்கின்றனர். காட்டில் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் விஷப்பாம்புகள் உள்ளன. ஒரு முறை நான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு காளான் கூட்டம் பாதையைத் தடுத்தது. ஒரு முறை கேமராவில் 200 மீட்டர் தொலைவில் ஒரு சிறுத்தை பதிவானது. நான் ஏறும்போது கவனமாக இருக்கிறேன். ஒருவர் உயிருடன் இருந்தால், நீங்கள் ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழ முடியும். பள்ளிக் கட்டிடம் அருகில் வரும்போது, நான் சத்தமாக அழைப்பேன். இரண்டு சகோதரிகள், ஸ்வரா மற்றும் ரேஷ்மா, வெறுங்காலுடன் நடந்து வருவார்கள். மற்ற இடங்களில், மாணவர்கள் நல்ல கல்விக்காகப் போட்டியிடுகிறார்கள், ஆனால் இந்தக் குழந்தைகள் பள்ளியில் இருக்க விரும்புகிறார்கள்'' என்றார். ஆசிரியர் மிதாரி தினமும் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கிறார். ஸ்வாரா டாக்டராக விரும்புகிறாள். ரேஷ்மா அடுத்த வருடம் முதலாம் வகுப்பில் சேருவார். தற்போது, அவர் அவளுக்கு அடிப்படை எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கற்றுக்கொடுக்கிறார். சிறுமிகளின் தந்தை தக்டு போட்கே இது குறித்து கூறுகையில், ''மிதாரியின் காரணமாக எனது மகள்கள் பள்ளியில் படிக்கின்றனர். மற்ற பள்ளி 8 கிமீ தொலைவில் உள்ளது. எங்கள் பள்ளியை அரசாங்கம் மூடாது என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார். பள்ளி கட்டிடத்தில் கசிவு இருக்கிறது. அதனைச் சரி செய்து கொடுக்க வேண்டும் அங்குள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர். மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/trending/teacher-climbs-a-mountain-for-10-km-daily-to-teach-two-students



