கோவை, கோவை-ஜபல்பூர் இடையே இயக்கி வந்த வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் புதிய எண்களுடன் நிரந்தர ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் படி கோவை-ஜபல்பூர் இடையே புதிய விரைவு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் சேவையில் ஜபல்பூர்-கோவை ரெயில் (எண்:20160) அடுத்த மாதம் 23-ந்தேதி முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 11.50 மணிக்கு ஜபல்பூர் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கோவை சந்திப்பை அடையும். அதேபோல் வருகிற 26-ந்தேதி கோவை-ஜபல்பூர் ரெயில் (எண்: 20159) திங்கட்கிழமைகளில் மாலை 5.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு ஜபல்பூர் சந்திப்பை அடையும். இந்த ரெயில் பாலக்காடு, சொரணூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், காசர்கோடு, மங்களூரு, தொக்கூர், முல்கி, உடுப்பி, குந்தாப்புரா, மூகாம்பிகா ரோடு பைந்தூர், கும்தா, கார்வார், மட்கான், திவிம், குடால், ரத்னகிரி, சிப்ளுன், கேட், ரோஹா, பன்வெல், நாசிக் ரோடு, புசாவல், கந்தவா, ஹர்தா, இடார்சி, பிபரியா, கதர்வாரா மற்றும் நரசிங்பூர் வழியாக சென்று ஜபல்பூரை அடைகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-weekly-special-train-between-coimbatore-and-jabalpur




