சென்னை, தமிழகத்தில் கோடை காலங்களில் பொதுவாக மின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி, தமிழகத்தின் மின் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு 21,211 மெகாவாட் வரை அதிகரித்தது. கோடை காலத்திற்கு பிறகு ஜூலையில் இருந்து வெயில் குறையும்போது, மின் தேவையும் படிப்படியாக குறையும். ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் முதல் முறையாக ஜூலை 14-ந்தேதி தமிழகத்தின் மின்தேவை, 21,724 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. அதுமட்டுமின்றி, தினந்தோறும் மாலை நேரங்களில் மின் தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில், இந்த மாதத்தில் அது 21 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இவ்வாறு மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே சென்னை புறநகர் உட்பட, பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தினமும் ஒரு மணி நேரம், குறிப்பாக இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி மின் தடை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “வழக்கமாக கோடைக் காலத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பரில் மின் தேவை குறையும் ஆனால் இந்த ஆண்டு மின் தேவை குறையவில்லை. மின் வாரியமும் நிதி நெருக்கடியில் உள்ளதால், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை, அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர். சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் தினமும், ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது” என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-increased-electricity-demand-and-a-daily-one-hour-rotational-power-cut




