லாகூர், ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி உயர்வு, அரசியல் உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி அவாமி நடவடிக்கை குழு என்ற மனித உரிமைகள் அமைப்பு அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. பேரணி இந்நிலையில், விலைவாசி உயர்வு, அடிப்படை உரிமைகள் மறுப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராவல்கட் நகரில் இருந்து முசாபர்நகருக்கு போராட்டக்காரர்கள் இன்று பேரணியாக செல்ல முயற்சித்தனர். துப்பாக்கி சூடு சனோதி நகர் அருகே போராட்டக்காரர்களை தடுத்த ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்காரர்கள் 8 பேர் உயிரிழாந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/8-protesters-killed-in-pakistan-rangers-firing-in-pok




